விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

508

விஜய் சேதுபதியை வைத்து, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற படத்தை இயக்கிய எஸ்.பி ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ என்ற படத்தை எடுக்கவுள்ளார்.

இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் வில்லனாக, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கவுள்ளார். இவர்களுடன், காமெடி நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜையில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு, தென்காசி, அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வெளியான நிலையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிந்துபாத்’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  தனுஷ் இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் 2 படங்கள் !