விஜய்,மற்றும் அவரது அப்பா சந்திரசேகரை கலாய்க்கும் மீம்ஸ்

92

இரண்டு நாட்களாக ஹாட் டாபிக் ஆக இருப்பவர் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் நேற்று புதிதாக ஷோபாவும் அதில் இணைந்து கொண்டார். முதலில் சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி ஆரம்பிக்க பதிவு செய்துள்ளேன் என கூறினார்.

இதை மறுத்த விஜய் என் தந்தை ஆரம்பித்த கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை அதில் எந்த தொடர்பும் ரசிகர்கள் வைத்துக்கொள்ள வேண்டாம் என கூறினார்.

விஜய்யின் அம்மா ஷோபாவோ விஜயும் சந்திரசேகரும் பேசிக்கொள்வதே இல்லை என கூறி இருந்தார்.

இந்நிலையில் விஜய் பேச்சையும் சந்திரசேகரின் பேச்சையும் கலாய்த்து சம்சாரம் அது மின்சாரம் படப்பாணியில் ஒரு மீம்ஸ் உலா சமூக வலைதளங்களில் அதிகம் சுற்றி வருகிறது அந்த மீம்ஸ் இதோ.

நீ ஆசைப்பட்டங்கறதுக்காக நாளைய தீர்ப்பு னு ஒரு படத்தை எடுத்து உன்னை அறிமுகபடுத்தன இந்த SAC ய தெரியலையா…?
தெரியலை…!
வரிசையா படம் ஓடலைன்னாலும் 8 வட்டிக்கு துட்டு வாங்கி தொடர்ச்சியா உன்னை வச்சு படம் எடுத்துட்டுருந்த இந்த அப்பாவ தெரியலையா…?
தெரியலை…!
நீ பாடுன ஒவ்வொரு பாட்டுக்கும் குறுக்கால “இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் இளைய தளபதி விஜய்” னு ஸ்லைடு போட்ட உன் குருநாதரை தெரியலையா…?
தெரியலை…!
படத்தை ஓட வைக்கறதுக்காக சங்கவி, யுவராணி னு கிளாமரா போட்டு உன்னை சினிமால நிலைக்க வச்ச இந்த புரட்சி இயக்குனரை தெரியலையா…?
தெரியலை…!
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கிட்ட இருந்து புரட்சியையும், கலைஞர் கருனாநிதி கிட்ட இருந்து கலைஞர் பட்டத்தையும் எடுத்து “புரட்சி கலைஞர்” விஜய்காந்த் னு விஜய்காந்தை பூஸ்டப் பண்ணி, அவரோட தம்பியா உன்னை நடிக்க வச்சு, ஸ்டாலின் கிட்ட இருந்து “தளபதி” பட்டத்தை சுட்டு “இளைய தளபதி” பட்டத்தை உனக்கு போட்டு, இப்ப அதையே தளபதி ஆக்கி அந்த பேர்ல அகில இந்திய கட்சி ஆரம்பிச்சுருக்க இந்த அப்பாவை உனக்கு தெரியலையா…?
தெரியலை…!
அப்ப நானும் உனக்கு தெரியாமயே கட்சி ஆரம்பிச்சுட்டன் னு சொல்லிக்குறேன் போடா…!
பாருங்க:  ஏப்ரல் 03 - கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Previous articleசெல்வராகவனுக்கு பிடித்தது என்ன
Next articleஅமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்