வர்மா வெளியாகும் அதே தேதியில் என் படம் – களம் இறங்கிய பாலா

309
வர்மா வெளியாகும் அதே தேதியில் என் படம் - களம் இறங்கிய பாலா

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் இயக்குனர் பாலா தனது அடுத்த படம் குறித்த வேலைகளில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளியானது. அதன் பின் கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக்கான ‘வர்மா’-வை பாலா இயக்கினார்.

விக்ரம் மகன் துருவ் அப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  ஆனால், பாலா இயக்கிய விதம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால், வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் வர்மா திரைப்படம் மீண்டும் உருவாகவுள்ளது. இந்நிலையில், தான் யார் என நிரூபிக்க முடிவெடுத்த பாலா தனது அடுத்த பட வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டாராம். ஆதித்யா வர்மா வெளியாகும் அதேநாளில் தனது படம் வெளியாக வேண்டும் என பாலா உறுதியாக இருக்கிறாராம்.

பாருங்க:  100 படங்கள் நடித்த பின்பே திருமணம் - நயன்தாரா அதிரடி முடிவு