வண்டலூர் பூங்காவில் இருந்து புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி!

302
வண்டலூர் பூங்காவில் இருந்து புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள 2 வங்க புலிகளைத் தத்தெடுத்தார்.

நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி ஆர்த்தி, ஆதித்யா என்னும் 2 வங்க புலிகளை தத்தெடுத்தார், அதன் பிறகு, அந்த இரு புலிகளின் உணவு மற்றும் பராமரிப்புக்கான 5 லட்சம் காசோலையை பூங்கா இயக்குனர் யோகேஷ் சிங்கிடம் வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி தனது நண்பர் ஒருவர் கூறியதால், 2 வங்க புலிகளையும் 6 மாதம் தத்தெடுத்ததாகவும், மேலும் அனைவரும் தங்களால் இயன்ற உதவியை வன விலங்குகளை பாதுகாக்க செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாருங்க:  மீண்டும் லீக் ஆன தர்பார் புகைப்படங்கள் - படக்குழுவினர் அதிர்ச்சி