ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 ரிலீஸுக்கு தயார்!

307
kanchana 3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா படத்நின் மூன்றாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
காஞ்சனா 1, 2 பாகங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் மூன்றாம் பாகத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். படத்தில் 6 பாடல்கள் இருக்கிறது எனவும், ஒவ்வொரு பாடலையும் வேறு வேறு இசையமைத்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. பாடல்கள் டூபாடு.காம் (doopadu.com)-ல் வெளியிடப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் படத்தில், வேதிகா மற்றும் ஓவியா ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும், கோவை சரளா, மனோபாலா, சூரி, மயில்சாமி, தேவதர்ஷினி , நிகிதா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் 19ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாருங்க:  ஏ.ஆர். ரஹ்மானின் "99 சாங்ஸ்" திரைக்கு வருகிறது!