ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தின் வைலைகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் கடந்த படம் ‘பேட்ட’ யின் பாடல்கள் பெரிய ஹிட் கொடுத்தன. அந்தவகையில், பேட்ட படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இது ரஜினியின் 166வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினியின் அரசியல் வாழ்க்கை தொடங்கி உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என ரஜினி அறிவித்திருந்தார்.
ஆனால், ரஜினியின் ரசிகர்கள் ரஜினியை திரைப்படத்தில் பார்க்க ஆவலாக இருந்தனர். அதனால், 3 வருடங்களுக்கு ஒரு முறை படங்களில் முகத்தை காட்டி வந்தார். இந்நிலையில், 2.O, பேட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.அந்த வகையில், தற்போது முருகதாஸ் உடன் இணைய உள்ளார். இப்படத்திற்கு, இன்னும் பெயர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.