கமல்ஹாசனுடைய குழுவில் ஆஸ்தான வசனகர்தாவாக இடம் பிடித்திருந்தவர் ‘கிரேஸி’ மோகன். இவரும் கமலும் இணைந்து கொடுத்த தமிழ் படங்களில் நகைச்சுவை காட்சிகள் அதிகமாக தான் இருக்கும்.

“வசூல்ராஜா” படத்திற்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மார்கபந்து என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேடை நாடகங்களில் மூலம் பிரபலமடைந்த ‘கிரேஸி’ மோகன். தனது டைமிங் காமெடியால் படம் வந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருந்தாலும் இன்றும் படத்தின் காட்சிகளை பார்த்தாலே நம்மை அறியாமல் குலுங்கி, குலுங்கி சிரித்து விடுவோம் அப்படி எழுதியிருப்பார் கிரேஸி’மோகன்.
“அருணாச்சலம்” படத்திற்கு வசனம் எழுதுவது பற்றி பேச ரஜினி, ‘கிரேஸி’ மோகனுக்கு போன் செய்திருக்கிறார். நாளை காலை எனது வீட்டிற்கு வாருங்கள் உங்களுடன் படம் பற்றி பேச வேண்டும் என சொல்லி இருக்கிறார் ரஜினி. அதற்கு மோகனோ நான் கமலினுடைய ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டு இருக்கிறவன்.

அவருடன் பயணித்து வருவதால் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டும், அவர் கருத்தை கேட்ட பிறகுதான் உங்களுக்கு உறுதி சொல்ல முடியும் என பதிலளித்துள்ளார். ரஜினியும் சூப்பர் சார் அருமை உங்களுடைய உண்மைதன்மையை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அவரிடம் கேட்டுவிட்டு வாருங்கள் என சொல்லி இருக்கிறார் பதிலுக்கு.
கமல்ஹாசனிடம் து இது பற்றி பேசிய போது கிரேசி மோகனுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. எடுத்த எடுப்பிலேயே ரஜினி படத்திற்கு வசனம் எழுத போறீங்களாமே வாழ்த்துக்கள் நல்லபடியா போய்ட்டு வாங்க என மனமார வாழ்த்து இருக்கிறாராம் கமல் .
‘கிரேஸி’மோகனிடம் பேசி முடித்த உடனே ரஜினி கமலை அழைத்து விஷயத்தை சொல்லி, அவரே கமலின் ஒப்புதலை பெற்று விட்டாராம் இந்த தகவலை ‘கிரேஸி’ மோகன் நாடக குழுவில் இடம் பெற்றிருந்த ‘மாது’பாலாஜி தெரிவித்திருந்தார்.