ரஜினியின் 'தர்பார்' பர்ஸ்ட் லுக்

ரஜினியின் ‘தர்பார்’ பர்ஸ்ட் லுக் வெளியானது! #Thalaivar167

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவுள்ள நிலையில், படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்படத்தில், ரஜினி போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் எனவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். ரஜினியும், நயன்தாராவும் ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ படங்களுக்கு பின் தற்போது ஜோடி சேரவுள்ளனர். ரஜினியின் மகளாக நடிக்க, நிவேதா தாமஸ் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.ரஜினி நடிப்பில், அனிருத் இசையமைத்த ‘பேட்ட’ பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது, இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இது நாள் வரை படத்திற்கு டைட்டில் முடிவு செய்யாத நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘தர்பார்’ என டைட்டிலை வெளியிட்டுள்ளது.மாஸ் டைட்டிலுடன் வெளிவந்த ஃபஸ்ட் லுக், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.