ரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

438

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவில், மாற்றம் ஏற்படுத்திய, சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒன்றுக்கொன்று சலைத்தது அல்ல. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின், கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால், ஒருவித எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

தற்போது, ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கி, மாஸ் காட்டினார். இந்நிலையில், மீண்டும் ரஜினியை வைத்நு படம் இயக்க ஆவலாக உள்ளாராம் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், ரஜினி தனதி இளைய மருமகன் விசாகனை வைத்து படம் இயக்குமாரு கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு, தற்போது இரண்டாவது திருமணம் நடைபெற்றது. முதல் திருமணம் அஷ்வின் ராம்குமாருடன் நடந்து பின் விவாகரத்தான நிலையில், தற்போது, தொழிலதிபர் மற்றும் நடிகரான விஷாகன் வனங்காமுடியுடன் திருமணம் நடைபெற்றது.
இவர், ஏற்கனவே ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனால், தற்போது அவரை நாயகனாக நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டுள்ளாராம் ரஜினி. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பாருங்க:  நயன்தாரா படத்தை விளம்பரம் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றி வரும் பேருந்து!