ரசிகர்கள் தொந்தரவு – ‘தளபதி 63’ படப்பிடிப்பு நிறுத்தம்!

341
'தளபதி 63'

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறுவதால், ரசிகர்களின் கூட்டம் அதிக அளவில் குவிவதால், படக்குழுவினருக்கு தொந்தரவாக அமைந்துள்ளது.

ஹைதராபாத்தில், படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம், என படக்குழு முடிவு எடுத்த நிலையில், சென்னையில் உள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும், என விஜய் கேட்டு கொண்டதால், சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது என தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பின் போது, ரசிகர்கள் கூட்டம் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டதால், திட்டமிட்ட காட்சிகளை திட்டமிட்ட நேரத்தில் எடுக்க முடியவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.
இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால், ‘தளபதி 63’ படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது.
இந்த பிரச்சனையால், படப்பிடிப்பு சிறு காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் பல கோடியில், அமைக்கப்பட்டுள்ளது. இனி அவ்வரங்கில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரியவந்துள்ளது.

பாருங்க:  கொஞ்ச நாளைக்கு அத மட்டும் பண்ணாதீங்க – நடிகர் விவேக் கொரோனாவைத் தடுக்க சொன்ன சிம்பிள் யோசனை!