மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது!

583
மே 9 முதல் 10 வரை 9 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில், வரும் மே 9 மற்றும் 10ம் தேதி, 9 படங்கள் வரை வெளியாகவுள்ளது. கோடை கொண்டாட்டத்துக்கு ஏற்ற வகையில், திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

மே 9ம் தேதி அதர்வாவின் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள இப்படம், த்ரில்லர் மூவியாக எடுக்கப்பட்டுள்ளது.

மே 10ம் தேதி, விஷால், ராஷிக்கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐயோக்கியா’ படம் வெளியாகவுள்ளது. வெங்கட் மோகன் இயக்கத்தில், ஆக்ஷன் மூவியாக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 10ம் தேதி ஜீவா, நிக்கி கல்ரானி நடித்துள்ள ‘கீ’ படம் வெளியாகவுள்ளது. இப்படம் அறிவியல் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு மொழியிலும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ப்ரித்வி பாண்டியன், சாந்தினி, மேலும் பலர் நடித்துள்ள ‘காதல் முன்னேற்ற கழகம்’ படம், காமெடி ஜர்னலில் உருவாகியுள்ள படம், மேலும், பேரழகி ஐ.எஸ்.ஓ, ‘உண்மையின் வெளிச்சம்’, ‘வேதமானவன்’ போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.

பாருங்க:  சின்மயி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு