Tamil Cinema News
மே 24ம் தேதி வெளியாகிறது, ‘பி.எம் நரேந்திர மோடி’!
ஓமங்க் குமார் இயக்கத்தில் ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் விவேக் ஓப்ராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளார்.
படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில், படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் ஏற்ப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், படம் தேர்தலை குறிவைத்து எடுக்கப்பட்டது, ஆதலால் படத்தை வெளியிடக்கூடாது என காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் படத்தில் தேர்தல் சம்பந்தமான காட்சிகள் இல்லை, ஆதலால் படத்தை வெளியிடலாம் என தீர்ப்பு வழங்கியது.
ஆனால், அந்த தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. தேர்தல் ஆணையம் படத்தை பார்த்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறியது. அந்நிலையில் படத்தை பார்த்த பின்னர், படத்தை தேர்தலுக்கு பின்னர் வெளியிடுமாறு ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் மே 24ம் தேதி படத்தை வெளியிடப்போவதாக பட தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.