Connect with us

முந்திக்கொண்ட வாலி…முதன்மை படுத்ததால் நேர்ந்த சோகம்…வேண்டாம் என ஒதுக்கி தள்ளிய எம்.ஜி.ஆர்?…

MGR VAALI

cinema news

முந்திக்கொண்ட வாலி…முதன்மை படுத்ததால் நேர்ந்த சோகம்…வேண்டாம் என ஒதுக்கி தள்ளிய எம்.ஜி.ஆர்?…

எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஆரம்பத்தில் பாடல் எழுதி வந்தது கண்ணதாசன் தான். ஹிட் பாடல்கள் பலவற்றிக்கு சொந்தமானது இவரது வரிகள் தான். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக பாடல் எழுதுவது தடை பட்டது கண்ணதாசனுக்கு. நல்லதொரு திறமையை எம்.ஜி.ஆர். தேடிக்கொண்டிருந்த நேரம் அது.

தனது மாயாஜால வரிகளால் எம்.ஜி.ஆர். பட பாடல்களை எழுதும் வாய்ப்பினை பெற்றார் வாலி. “உலகம் சுற்றும் வாலிபன்”, “எங்க வீட்டுப்பிள்ளை”, “ஆயிரத்தில் ஒருவன்” பட பாடல்கள் எம்.ஜி.ஆரின் இமஜை உயர்த்தியது. பின்னர் அவரின் ஆஸ்தான பாடலாசிரியரானார் வாலி. அதோடு எம்.ஜி.ஆருடன் நல்ல நெருக்கம் கிடைத்தது வாலிக்கு.

vaali mgr

vaali mgr

எம்.ஜி.ஆரை பாசமாக அண்ணன் என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் வாலி. அவரின் அன்பிற்கு கட்டுப்பட்டவராகவே இருந்து வந்தார் எம்.ஜி.ஆரும். தனது தலைமையில் தான் வாலிக்கு திருமணம் நடைபெற வேண்டும் என அன்புக்கட்டளை போட்டிருந்தாராம் எம்.ஜி.ஆர்.

 

வாலியும் அதற்கு நிச்சயமாக உங்கள் ஆசீர்வாததோடும், உங்கள்  கண்முன்னே தான் எனது திருமணத்தை நான் முடிப்பேன். உங்களின் வாழ்த்துக்களோடு தான் எனது புதிய வாழ்க்கை துவங்கும் என சொல்லி வந்திருக்கிறாராம்.

ஆனால் சூழ்நிலையின் காரணமாக எம்.ஜி.ஆரை அழைக்காமல் தனது திருமணத்தை நடத்தி முடித்து விட்டாராம் வாலி. இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்ற எம்.ஜி.ஆர். எனது படங்களுக்கு வாலி இனி பாட்டு எழுதக்கூடாது என உத்தரவிட்டாராம். எம்.ஜி.ஆரை. அடிக்கடி சந்தித்து அவரின் கோபத்தை தனித்து அதன் பின்னரே பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றாராம் வாலி.

More in cinema news

To Top