மீண்டும் துவங்கும் இந்தியன் 2 – முக்கிய அப்டேட்

376

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஊழல் செய்தவர்களை களையெடுக்கும் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்ததால் அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பல வருடங்களுக்கு பின் இந்தியன் 2 எடுக்க ஷங்கர் முடிவெடுத்தார். கமல்ஹாசன் நடிக்க லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பும் 3 மாதங்களுக்கு முன்பே வேகமாக தொடங்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசனின் மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசனும் தனது அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இப்படத்தை தயாரிப்பதில் இருந்து லைக்கா நிறுவனம் பின் வாங்கிவிட்டதாகவும், ரிலையன்ஸ் சினிமா மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்களிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வருகிற 19ம் தேதி தேர்தல் முடிவடைய உள்ளது. எனவே, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் துவங்கும் எனத் தெரிகிறது.

பாருங்க:  இந்தியன் 2 -வில் ஆர்யா - இன்னும் யார் யார்?