மாநகரம் பட இயக்குனர் படத்தில் விஜய்…

363

அட்லி படத்திற்கு பின் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் கால் பந்தாட்ட பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் விஜய் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் இன்னும் எந்த இயக்குனரையும் உறுதி செய்யவில்லை எனக்கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட, இப்படத்தில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் இப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  நடிகர் விஜய் குடும்பத்தில் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட நபர்! சோகத்தில் குடும்பம்!