மதம் மாறிய தாடி பாலாஜி – பின்னணி என்ன?

379

ஏற்கனவே வேறு மதத்துக்கு மாறியிருந்த நடிகர் தாடி பாலாஜி தற்போது மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியுள்ளார்.

பெரிய திரை, சின்னத்திரை என நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் தாடி பாலாஜி. பாலாஜியின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து பிரிந்து சென்ற மனைவி நித்யா, மீண்டும் பாலாஜியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்யும் அளவுக்கு மாறியிருந்தார் தாடி பாலாஜி.

பாலாஜி ஏற்கனவே வேறு மதத்திற்கு மாறியவர். இந்நிலையில், திடீரென இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலில் புரோகிதர்கள் மந்திரம் கூற முறைப்படி இந்து மதத்திற்கு அவர் மாறியுள்ளார். இதுபற்றி பேட்டி கொடுத்த பாலாஜி “வேறு மதத்துக்கு மாறிய பின் நிம்மதி இல்லாமல் சில காலம் இருந்தேன். ஆனால், இந்து மதமே நிம்மதி என எனக்கு தோன்றியது.எனவே, மீண்டும் தாய் மதத்துக்கே திரும்பிவிட்டேன்” என அவர் கூறியுள்ளார்.

பாருங்க:  மறக்க முடியா பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி