கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றுப் புதினம் “பொன்னியின் செல்வன்”. இந்த வரலாற்றை திரைப்படமாக்க உள்ளார் மணிரத்தினம். பல கோடி பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தில், ஏகப்பட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைய உள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமிதாபச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
அந்த வகையில், யார்யாருக்கு என்ன கதாபாத்திரம் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளனர்.
அந்தவகையில், படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.பூங்குழலி கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் என்பதால், நயன்தாரா ஒப்பு கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.