மணிரத்னம் படத்தில் ஆதி – பொன்னியின் செல்வன் அப்டேட்

399
நடிகர் ஆதி

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஆதி நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

எழுத்தாளர் கல்கி எழுதி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், பாலச்சந்தர் என பலரும் முயன்றனர். ஆனால், பட்ஜெட் அதிகம் மற்றும் நிறைய நடிகர்களை ஒருங்கிணைப்பது என்பதால் அம்முயற்சி கடைசி வரை கைக்கூட வில்லை.

இயக்குனர் மணிரத்னம் இப்படத்தை எடுக்க கடந்த சில வருடங்களாக முயற்சி செய்து வந்தார். தற்போது அந்த பணி தீவிரமடைந்து வருகிறது. கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், அமலாபால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் ஆதி ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க முடியவில்லை என அவர் புலம்பியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தற்போது அவர் நடிக்கிறார் என்கிற செய்தி வெளிவந்துள்ளது.

பாருங்க:  சத்தியராஜால் சினிமா வாய்ப்பு வரவில்லையா? - நடிகை விசித்ரா விளக்கம்!