போலியோ விழிப்புணர்வு – நடிகர் சங்கம் தயார்!

424

போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் அமர்வு முன்னால் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலியோ முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த மக்களுக்கு பரிட்சயமான முகங்களான தென் இந்திய நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவும், அவர்களை வைத்து விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்திரவிட்டனர்.

விஜய், அஜித், சூர்யா அவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பில் தமிழகத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வரப்படுகின்றன. எனவே நடிகர் சங்க செயலளார் தரப்பில் போலியோ விழிப்புணர்வு நடத்த நடிகர் சங்கம் தயார் என அவர் கூறினார்.விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள நடிகர்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

எனவே, நடிகர் சங்கத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை மார்ச் 28ம் தேதி ஒத்திவைத்துள்ளது, மதுரை உயர் நீதிமன்றம்.

பாருங்க:  விசாரணையில் இருந்து தப்பிக்க ரத்தம் சிறுநீர் சோதனையில் ராகிணி திவேதி செய்த கோல்மால் வேலை