போயஸ்கார்டனில் வீடு ; ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் : ஜெயம்ரவி வேண்டுகோள்!

393

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்குவதற்காக ஒரு திரைப்பட நிறுவனத்திற்கு  ஜெயம்ரவி 3 படங்கள் நடித்துக்கொடுக்க வுள்ளார் என்கிற செய்தியக நடிகர் ஜெயம்ரவி மறுத்துள்ளார்.

சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தான் 3 படங்கள் தொடர்ந்து நடிக்க இருப்பதாய் சமீபத்தில் ஜெயம்ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த பட நிறுவனத்தின் முதலாளிக்கு போயஸ்கார்டனில் ஒரு வீடு இருக்கிறது எனவும், சமீபத்தில் அந்த பக்கம் சென்ற ஜெயம்ரவிக்கு அந்த வீடு பிடித்துப்போய் விட, இது யாருடையது என விசாரிக்க, விஷயம் தெரிந்தவுடன் 3 படம் நடித்து தருகிறேன்.

சம்பளத்திற்கு பதிலாக அந்த வீட்டை எழுதிக்கொடுத்து விடுங்கள் என ஜெயம் ரவி டீல் பேசினாராம். இதற்கு அந்நிறுவனமும் ஒப்புதல் தெரிவித்து விட தற்போது அந்த நிறுவனத்துக்கு 3 படங்கள் தொடர்ச்சியாக நடித்துக்கொடுக்க ஜெயம்ரவி முடிவு செய்துள்ளார் எனவும் நேற்று செய்திகள் வெளியானது. ஆனால், அதை ஜெயம் ரவி மறுத்துள்ளார். ஒரு செய்தியை வெளியிடும் முன்பு உண்மைகளை ஆராயுங்கள் என அவர் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாருங்க:  ஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்