cinema news
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா?
பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று விஜய் சேதுபதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்துள்ள படம்’சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படம் மார்ச் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இப்பட விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் விஜய் சேதுபதி.
அப்போது, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பொள்ளாச்சி சம்பவம் பற்றி கருத்து கேட்ட போது, பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட கேட்க முடியவில்லை, சிலர் அந்த பெண்கள் மீது தான் தவறு என்று கூறுகின்றனர். ஆனால், அது தவறு. இந்நேரம் அந்த விவகாரத்தில் சம்மதப்பட்டவருக்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று கூறினார்.