பிங்க பட ரீமேக்குக்கு பின் அஜித் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில்?

392
ரீமேக் படங்களை குறி வைக்கும் அஜீத்

தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது, பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்சி ஆகியோ நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தை சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில், எகிப்து மொழி படமான ‘ஹெப்தா – தி லாஸ்ட் லெக்சர்’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் போனி கபூர், அப்படத்தை தமிழில் அஜித்தை வைக்து எடுக்கலாம் என ஆசைப்படுகிறாராம். இதற்கு அஜித்தும் ஓகே கூறி விட ‘பிங்க்’ பட ரீமேக் முடிந்த பின் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாருங்க:  நடிகரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது – ஏ ஆர் ரஹ்மான் ஆதங்கம்!