பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் ஸ்ரீரெட்டி – களைகட்டும் பிக்பாஸ் சீசன் 3

380

இந்த முறை கவர்ச்சி கன்னி ஸ்ரீரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என செய்திகள் கசிந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் தமிழ் சினிமாவின் சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியிடம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. எனவே, விரைவில் யார் யாரெல்லாம் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்கிற பட்டியல் வெளியாகும் எனத்தெரிகிறது.

பாருங்க:  சேரனுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்தது மோதல் - வீடியோ பாருங்க..