பாடகராக கால் பதித்த ரோபோ ஷங்கர்!

417
பாடகராக கால் பதித்த ரோபோ ஷங்கர்

காமெடி நடிகரான ரோபோ ஷங்கர்,மாரி, வேலைக்காரன் போன்றபடங்களில் நடித்தவர்.
இவர் தற்போது, சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்த போஸ் வெங்கட் இயக்கவுள்ள படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இக்கதைக்கு, இன்னும் பெயரிடவில்லை என தெரிகிறது.

ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹரி சாய் இசையமைத்துள்ளார், ரூபி ஃபிளிம்ஸ் சார்பில் ஹரிஷ் தயாரிக்கிறார்.ஆட்டோ டைரவராக வாழ்க்கையை தொடங்கியவர் போஸ் வெங்கட், அதனால் ஆட்டோ டிரைவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

அந்த பாடல், சாதரணமான ஆட்டோ தொழிலாளி பாடுவது போல் அமைந்ததால், ஸ்ருதி, ராகம் தெரியாத ஒருவர் பாடினால் சரியாக இருக்கும் எனவும், அதற்கு ரோபோ ஷங்கரின் குரல் கட்சிதமாக இருக்கும் என்பதாலும் அவரை பாடவைத்துள்ளனர்.

பாருங்க:  டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து தற்கொலை முயற்சி