படங்களில் ஹீரோக்கள் முக்கியமான கட்டங்களில் வில்லங்களை பார்த்தும், வில்லன்கள் ஹீரோக்களை எதிர்க்கும் போது பேசிய பஞ்ச் டயலாக்குகளை நம்ம இசையமைப்பாளர்களும், கவிஞர்களும் தங்களது படங்களுக்கு பாடல்களாக மாற்றி தங்களது சாமர்த்தியத்தை காட்டியிருப்பார்கள். இதையெல்லாம் இப்போ இருக்கிற 2கே கிட்ஸ் கவணிச்சாங்களான்னு தெரியாது. இந்தா பாடல்கள் எல்லாம் எந்த படத்திலேயிருந்து எடுத்தாங்கன்னு தெரியுமா?…
“காலா” படத்தில் ரஜினி ரொம்ப சீரியஸாக பேசியிருந்த ‘வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்’ இந்த பஞ்ச் டயலாக்கை “நட்பே துணை” படத்தில் ஹிப்-ஆப் தமிழா ஆதி பாடலாக மாற்றியிருந்தார்.
அதே வரிகள் அச்சு பிசங்காம அப்படியே வந்திருக்கும் பாடலில். “நாட்டாமை” படத்தில் மனோரமாவை பார்த்து ஆக்ரோஷமாக பொன்னம்பலம் பேசியிருந்த தாய் கிழவி டயலாக்கை அனிருத் பாடலாகவே மாற்றியிருந்தார். தனுஷின் “திருச்சிற்றம்பலம்” படத்தில் தாய் கிழவி என்றே அந்த பாடல் துவங்கும்.

“வைதேகி காத்திருந்தாள்” படம் பார்த்தவர்கள் இந்த டயலாக்கை மறந்திருக்கவே மாட்டார்கள். கவுண்டமணி நக்கலாக கேட்ட பெட்டர்மேக்ஸ் லைட்டே தான் வேணுமாவை இசையமைப்பாளர் பரத்வாஜ் அப்படியே தான் இசையமைத்த “அரண்மனை” படத்தில் பயன்படுத்தியிருப்ப்பார்.
அதே போல கவுண்டமணியின் லைஃப் டைம் மெஹா ஹிட் காமெடி டயலாகான சூரியன் பட காந்த கண்ணழகி காமெடியை, டி.இம்மான், சிவகார்த்திகேயன் நடித்த “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் பாடலாகவே மாற்றியிருந்தார்.
இதனை பாடல்களை கேட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள் பலர் கவணிக்கத்தவறியிருக்கலாம். ஆனால் இது தான் சாமர்த்தியம் என்றும் சொல்லலாம். ஏற்கனவே ஹிட்டான ஒரு விஷ்யத்தை தங்களுடைய படைப்பில் சேர்த்தால் அது எளிதில் சென்றடையும் என்ற தந்திரம் தான். வருங்காலத்தில் இது மாதிரி எத்தனை ஹிட் டயலாக்கள் எல்லாம் பாடல்களாக மாறுகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.