பகவத் கீதை பற்றி விஜய் சேதுபதி தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை குறித்து நடிகர் விஜய் சேதுபதியாக சர்ச்சையான கருத்தை கூறியதாக செய்திகள் எழுந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில், விஜய்சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் “என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.