Tamil Cinema News
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு!
YouTube சேனல் Black Sheep பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள படம், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். Black Sheep கார்த்திக் வேணுகோபால், இயக்கியுள்ளார்.
இப்படத்தில், பிரபல விஜய் டிவி நட்சத்திரம் ரியோ, நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஷெரில் நடித்துள்ளார். மேலும், ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே விக்னேஷ், Black Sheep நட்சத்திரங்கள் உள்ளிட்ட நிறைய பேர், இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இறுதிக்கட்ட படப்படிப்பு முடிவடைந்து வந்த நிலையில், மே மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பளாரான சிவகார்த்திகேயன், தற்போது தனது இரண்டாவது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தான் தயாரிக்கவிருக்கும் மூன்றாவது படத்தையும் முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார்.
