நான் என்ன நிர்வாணமாகவா நடித்துள்ளேன்? – நடிகை ஓவியா கோபம்

434
Actress Oviya latest News - 90ml

90 எம்.எல். படம் தொடர்பாக நடிகை ஓவியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த ஓவியா 90 எம்.எல். என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோக்களில் ஆபாச காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடக்கத்தில் பொறுமையாக பதிலளித்து வந்த ஓவியா ஒரு கட்டத்தில் கோபமடைந்தார் “ஆணாதிக்கவாதிகள் என் படத்தை பார்க்க வேண்டாம். இப்படம் ஆணாதிக்கவாத சிந்தனைக்கு எதிரானது. நான் ஒன்றும் நிர்வாணமாக நடிக்கவில்லை. கதைக்கு ஏற்ப நடிப்பதில் தவறு ஒன்றும் இல்லை” என அதிரடியாக பதிலளித்துள்ளார். 90 எம்.எல். படத்திற்கு வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் ‘ஏ’ சான்றிதழை தணிக்கை குழு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  மனோரமா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா