nayanthara movie airaa bus

நயன்தாரா படத்தை விளம்பரம் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றி வரும் பேருந்து!

நயன்தாராவின் அடுத்த படம் ‘ஐரா’. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அப்படத்தின் போஸ்டரை ஒட்டிய பேருந்து ஒன்று தமிழகம் முழுவதும் வளம் வருகிறது. இப்படி ஒரு படத்தை விளம்பரம் படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ஐரா’. இப்படத்தை ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய கே.எம். சர்ஜூன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா, முதல் முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில், கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கேஎஸ். சுந்திரமூர்த்தி இசையமைத்து உள்ளார். கதை மற்றும் திரைக்கதை ப்ரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.’ஐரா’ என்ற பெயர் படத்துக்கு ஏன் சூட்டப்பட்டது என்று இயக்குனர் விவரித்துள்ளார்.

இந்திரனின் வாகனமான ‘ஐராவதம்’ யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. ஐராவதம் யானையின் நினைவுத்திறன் மிகக் கூர்மையானது. அது போல் நயன்தாராவின் ஒரு கேரக்டருக்கு பொருத்துமாக இருக்கும் என கூறி இப்பெயர் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மார்ச் மாதம் 28ம் தேதி இப்படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.