நடிகர் வைபவ் 'சிக்ஸர்' அடிக்க உள்ளார்

நடிகர் வைபவ் ‘சிக்ஸர்’ அடிக்க உள்ளார்!

சென்னை 28 (2ம் பாகம்), மங்காத்தா போன்ற படங்களில் நடித்தவர் வைபவ். இவர் அடுத்து அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கவுள்ள ‘சிக்ஸர்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

வால்மார்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்ரீதர், தினேஷ் கண்ணன் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைப்பில், பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகக் கருதப்படுகிறது. அதை மனதில் வைத்து இந்தப் படத்துக்கு `சிக்ஸர்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறோம், எனப் படக்குழுவினர் கூறியுள்ளனர்.சிக்ஸர் என பெயரிடப்பட்டு இருந்தாலும், கிரிக்கெட்டுக்கும் இப்படத்துக்கும் சம்மதம் இல்லை எனவும், ‘சிக்ஸ்’ என்ற வார்த்தை பெரும் பங்கை வகிக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கவுள்ளார்.

படத்தின் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன, கோடைக்கால விடுமுறை இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.