நடிகர் விஷால் – அனிஷா திருமணம் எப்போது?

441

நடிகர் விஷால் தனது திருமண தேதியை வெளியிட்டுள்ளார்.

விஷாலுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷாவுக்கும் இடையே காதல் உருவானதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் மார்ச் மாதம் 16ம் தேதி ஹைதராபாத்தில் அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி தனக்கும், அனிஷாவுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக விஷால் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும், எந்த இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  போகாதே கவின் போகாதே... காதலுடன் கெஞ்சம் லாஸ்லியா - பிக்பாஸ் வீடியோ