த்ரிஷாவின் 36வது பிறந்தநாள் – 60வது படம் ட்ரைலர் வெளியீடு!

378

தமிழ் சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் த்ரிஷாவின் 36வது பிறந்தநாளான நேற்று (மே 4) பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ‘ஜெஸ்ஸி’, ‘ஜானு’, ‘தனலட்சுமி’ போன்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர். எளிமையான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

‘மௌனம் பேசியதே’ படம் முதல் ’96’ படம் வரை அவரின் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், த்ரிஷாவின் 36வது பிறந்தநாளான நேற்று, அவர் ஒரு வீடுயோவை வெளியிட்டார். அதில், மே 4 எனக்கு ஸ்பெஷல் தான். என் பிறந்தநாள் என்று அனைவருக்கும் தெரியும்.. ஆனால், இந்த வருடம், ரொம்ப ஸ்பெஷல், ஏன்னென்றால், எனது 60வது படமான ‘பரமபத விளையாட்டு’ ட்ரைலர் மற்றும் செகண்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

இப்படம், ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் படம். இந்த ஜர்னல் இதுவே எனக்கு முதல் முறை. ஒரு இரவு காட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தாய் மகளின் அன்பை இப்படத்தில் பார்க்கலாம் எனவும் கூறினார்.

இப்படத்தை, அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். த்ரிஷா இப்படத்தில் மருத்துவராக நடித்துள்ளார். மேலும் வாய் பேசாத, காது கேட்காத பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

பாருங்க:  பஞ்சாபில் பிறந்த சோனு சூட்டுக்கு தேர்தல் ஆணையம் அளிக்க இருக்கும் கெளரவம்