‘தொட்டி ஜெயா’ பார்ட் 2 உருவாகவுள்ளது!

402

சிம்பு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தொட்டி ஜெயா’. ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் மூவியாக எடுக்கப்பட்டது. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார். V.Z துரை இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையமைப்பில் உருவான படம் அது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 13 வருடங்களுக்கு பிறகு உருவாக உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளில் ஈடுப்பட்டுள்ளார் V.Z துரை. இதுவே சிம்புவிற்கு முதல் இரண்டாம் பாகம் படம்.

மேலும், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார் சிம்பு.

மேலும் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் ‘தொட்டி ஜெயா 2’ வில் நடிக்கவுள்ளார்.

பாருங்க:  எஸ்.பிபியின் இறுதி சடங்குகள் தொடங்கியது