தீபாவளிக்கு வருகிறது 'தளபதி விஜய் 63-வது படம்

தீபாவளிக்கு வருகிறது ‘தளபதி விஜய் 63-வது படம்!

தளபதி விஜய் நடிக்கும் அவரது 63-வது படம் அட்லி இயக்கத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு டைட்டில் உறுதி செய்யப்படாத நிலையில் இதனை ‘தளபதி 63’ என்று அழைத்து வருகின்றனர்.அட்லி, விஜயை வைத்து இயக்கிய படம் தெறி, மெர்சல் படங்கள், இந்த படங்களை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது.அதே போல், இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையும் சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

‘தளபதி 63’ படத்தில் விஜய் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் எனவும் அதற்கு ஏற்ற வகையில் உடல் அமைப்பை மாற்றியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.இந்த படத்தில் அறிமுக பாடலில் விஜய் உடன் சேர்ந்து 1000 குழந்தைகள் நடனம் ஆடுகின்றனர்.

இதில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதன்படி, வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.