திரைக்கு வருகிறது ஹிப்ஹாப் தமிழாவின் ‘நட்பே துணை’

395

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘நட்பே துணை’ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி தனது வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து எடுத்த படம் ‘மீசையை முறுக்கு’. அப்படத்தை, அவரே இயக்கி நடித்திருப்பார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங் இயக்கியுள்ளார். ஆதியே நடித்து, இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் நாயகியாக அனகா என்ற புதுமுகம் அறிமுகமாகி உள்ளார்.இப்படத்தில் பல புதுமுகங்கள் அறிமுகமாக உள்ளனர். யூடுயூப் (youtube) பிரபலம் எருமசானி விஜய், prank show வில் பிரபலமான பிஜிலி ரமேஷ், மேலும், விக்னேஷ், சுட்டி அரவிந்த், தங்கதுரை, ஹரிஷ் உத்தமன்,கௌசல்யா, வினோத், ராஜ்மோகன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், கரு. பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், ‘நட்பே துணை’ படத்தை ஏப்ரல் 4ம் தேதி வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது.

பாருங்க:  காப்பி அடித்தாலும் தேவா கொடுத்தது பில்டர் காஃபிதான்