‘தர்மபிரபு’ படம்|Dharmaprabhu -Teaser டீசர் வைரலாகி வருகிறது!

489

யோகி பாபு, கருனாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.எமதர்ம ராஜாவாக யோகிபாபு நடித்துள்ளார். அதில், தற்போது உள்ள அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் வசனங்கள் அமைந்துள்ளன.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

யோகிபாபு மற்றும் கருணாகரன் இப்படத்தில் மெயின் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் விமல் மற்றும் வரலட்சுமி நடித்த ‘கன்னிராசி’ படம் வெளியாகமல் உள்ளது.

மார்ச் 29ம் தேதி வெளியான இப்பட டீசரில், எமலோகத்தில் நடக்கும் அரசியல்களில், தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் கலாட்டாவை கலாய்த்து வசனங்கள் பேசப்பட்டுள்ளன.அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்னும் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Dharmaprabhu -Teaser | Yogi Babu | Muthukumaran | Sri Vaari Film

பாருங்க:  ஹனிமுன் குறித்து காஜல் அகர்வால்