தர்பார் பட முக்கிய அப்டேட்

தர்பார் பட முக்கிய அப்டேட் – ரஜினி ரசிகர்கர்கள் குஷி!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்துக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு உள்ளிட பலரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி மும்பையில் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது. எனவே, விரைவில் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.