தர்பார் படத்தில் ரஜினியின் வேடம் இதுதான்

தர்பார் படத்தில் ரஜினியின் வேடம் இதுதான் – கசிந்த தகவல்

முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.

பேட்டை வெற்றி படத்தை அடுத்து ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் எனத் தெரிகிறது.

தர்பார் படத்தில் ரஜினியின் வேடம் இதுதான் 01

இப்படத்தில் ரஜினி போலீஸாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. தற்போது ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிப்பது தெரியவந்துள்ளது. முதல் கட்டப்பிடிப்பு நடைபெற்ற மும்பை சேவியர் கல்லூரியில் காவல் நிலையம் போல் செட் போடப்பட்டு, அங்கு சில கைதிகளை ரஜினி விசாரணை செய்வது போல் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகளுடன் ரஜினி நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியாகியது.