தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்ற பார்த்திபன் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
தயாரிப்ப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வருகிறார். துணைதலைவர் பதவிகளில் பிரகாஷ்ராஷ், பார்த்திபன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், திடீரென தனது பதவியை பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை பார்த்திபன் அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், பார்த்திபன் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.