தயாரிப்பாளராக மாறிய அமலாபால்!

365
ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்

தமிழ் சினிமாவில், ‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். பின், தன் எதார்த்தமான நடிப்பை மைனா படம் மூலம் வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.பின், விஜய், தனுஷ், அதர்வா என முன்னனி நடிகர்களுடன் நடித்தார். பின் இயக்குநர் விஜய் உடன் திருமணமாகி, விவாகரத்து ஆனப்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், தற்போது படவாய்ப்பு கிடைக்காத நிலையில், ஃபோட்டோ ஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

தற்போது ‘கடவர்’ என்னும் படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார் அமலாபால்.

இதை பற்றி அமலாபால் கூறுகையில் : ‘கடவர்’ படக் கதையை கேட்டேன், இதுவரை நாம் பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட வித்யாசமான திரைக்கதையாக இருந்தது.கேரளாவில் பிரபலமான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே “ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட உள்ளது.

ஒரு நடிகையாக, இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என நினைத்தேன், அதனால் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளேன் என கூறினார்.

பாருங்க:  சினிமா துறையில் கால் பதிக்கிறார் விஜய் சேதுபதியின் மகன்!