தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படம்

484

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

பேட்ட படத்தில் ரஜினியை இயக்கி பெரிய இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளவர் கார்த்திக் சுப்புராஜ். இப்படம் தனுஷுக்கு மிகவும் பிடித்துவிட கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

ஆனால், தனுஷ் வெவ்வேறு படங்களில் தொடர்ந்து பிசி ஆகிவிட்டார். எனவே, அவரும் கார்த்திக் சுப்புராஜும் இணையும் படம் டிராப் ஆகி விட்டதா என செய்திகள் கூட எழுந்தது. இந்நிலையில், தனுஷுக்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் தீவிரமாக எழுதி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவுள்ளது.  படத்தில் பல காட்சிகள் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் எடுக்கப்படவுள்ளதாம்.  குறிப்பாக, இப்படத்தில் ஒரு பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

பாருங்க:  அண்ணனுடன் சேர்வது குறித்து தனுஷ் டுவிட்