தனுஷ் இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் 2 படங்கள் !

323
தனுஷ் இரு கதாபாத்திரத்தில்

தனுஷ் ‘மாரி 2’ படத்திற்கு பிறகு தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் இரு வேடங்களில், அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அப்பா வேடத்தில், 45 வயது தந்தையாக நடித்துள்ளார் தனுஷ். அதில், வயதான தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மகன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இன்னும் நடிகை கமிட்டாகவில்லை என தெரிகிறது.இப்படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதேபோல், துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் தனுஷ் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும், அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவந்நுள்ளது. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். மேலும், நவீன் சந்திரா இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பெயர் சூட்டப்படாத இப்படத்தில், மகன் தனுஷ் திருடனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

பாருங்க:  திரைக்கு வருகிறது ஹிப்ஹாப் தமிழாவின் 'நட்பே துணை'