தங்கள் நிறுவனம் தயாரித்த படங்களின் புகழ்பாடும் ராஜ்கமல் நிறுவனம்

தங்கள் நிறுவனம் தயாரித்த படங்களின் புகழ்பாடும் ராஜ்கமல் நிறுவனம்

வரும் நவம்பர் 7ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளாகும் அந்த நாளில் கமல்ஹாசன் தனது 232வது படத்தின் பெயரை அறிவிக்கிறார் மோஷன் போஸ்டர் கொண்ட டீசரும் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் புதிய படம் பற்றிய அப்டேட்டை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் பல்வேறு விதமான படங்களை தயாரித்துள்ளது தாங்கள் நிறுவனத்தின் சிறந்த படங்களாக அபூர்வ சகோதரர்கள்,குருதிப்புனல், தேவர் மகன், சத்யா, ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் படங்களை குறிப்பிட்டுள்ளது.

ராஜ்கமல் தயாரித்த சத்யா படத்தை பார்த்து பார்த்துதான் கமலின் 232வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சினிமா பக்கம் வர வேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டதாம் இதை அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.