ஜோதிகா போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஜாக்பாட்’. இயக்குநர் கல்யாண் இந்த படத்தை இயக்கி உள்ளார். சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில், ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்ந படத்தின் படப்பிடிப்பு, திட்டமிட்டு 35 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் நேற்று(ஏப்ரல் 29) வெளியிடப்பட்டுள்ளது.மேலும், 3 படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஜோதிகா.