ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ – விஜய் இயக்குகிறார்

264
ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ - விஜய் இயக்குகிறார் 01

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை  ‘தலைவி’ என்கிற தலைப்பில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அவரது வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் வந்துள்ளது. ஏற்கனவே இயக்குனர் கவுதம் மேனன் இணையத்தில் வெளியாகும் டெலி ஃபிலிமாக இயக்கி வருகிறார். இதில், ஜெயலலிதாவின் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ - விஜய் இயக்குகிறார்

இந்நிலையில், இயக்குனர் விஜய் ஜெ.வின் கதையை கையில் எடுத்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள விஜய் “தலைவி என்கிற பெயருக்கு அவரை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும். தலைவர்கள் பிறப்பதில்லை… உருவாகிறார்கள் என்று சொல்வார்கள். ஜெயலலிதா மேடம் அதற்கு அப்பாற்பட்டவர்.

அவர் பிறவியிலேயே தலைவருக்கான குணங்களை பெற்றவர். அவரது தைரியம், ஆளுமை, புத்திசாலித்தனம், உழைப்பு, அனுபவம் அனைத்தும் என்னை கவர்ந்தது. அதனால்தான், அவரின் கதையை இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக தற்போது உழைத்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  என் மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் டிவிட்