ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கவுள்ள படம் – ‘தலைவி’

405

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. அப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கவுள்ளார்.ஜெயலலிதா அவர்களின் கதையை படமாக்க பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.

பாரதி ராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் எடுக்க ஆசைப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் விஜய் அப்படத்தை எடுக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. இப்படத்திற்கு ‘தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது.

மதன் கார்கி பாடல்கள் எழுத, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, விப்ரீ மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் எடுக்கப்பட உள்ளது.

ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், கங்கனா ரணவாத் ஆகியோரை ஜெயலலிதாவாக நடிக்க ஆலோசனை செய்து வந்த நிலையில், தற்போது கங்கனா ரணவாத் ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  சூர்யாவின் NGK படம் ரிலீஸுக்கு தயார்!