Watchman Movie

சௌக்கிதார் போஸ்டுடன் வெளியாகிய ஜி.வி யின் வாட்ச்மேன்!

நாய், தன் வாயில் ‘ i am chowkidhar too’ என்ற வசனம் உடைய போர்டை கவ்வியவாறு நிற்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அந்த போஸ்டர் சமுக வலைதலங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு காரணம் சௌக்கிதார் என்ற வார்த்தை அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது தான்.கடந்த சில நாட்களாக பாஜக கட்சி தலைவர்கள் ட்விட்டரில் தங்கள் பெயருக்கு முன்னால் சௌக்கிதார் என்று சேர்த்திருந்தனர்.’சௌக்கிதார்’ என்றால் மக்கள் பாதுகாவலன் என்று அர்த்தம்.

அரசியல் தலைவர்கள் பலரும் இதை தங்கள் பெயர் முன்னால் சேர்த்திருந்த நிலையில், நாய் ஒன்று ‘நானும் சௌக்கிதார் தான்’ என்ற வசனத்தை கொண்ட போர்டை கவ்வியவாறு போஸ் கொடுத்துள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.