சூர்யாவின் NGK படம் ரிலீஸுக்கு தயார்!

392

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவானப் படம் என்.ஜி.கே. இப்படத்தில், ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது, டி.ஆர். பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.மே 31 அன்று படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நந்த கோபலன் குமரன் என்பது தான் என்.ஜி.கே என்பதன் விரிவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ஹிந்து கடவுள் மஹாலட்சுமி குறித்து ஹாலிவுட் நடிகை பெருமிதம்