சிவகார்த்திக்கேயன், ரமேஷ் கண்ணா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கு ஓட்டு இல்லையா?

382

தமிழகத்தில், வாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கி நடந்து கொண்டு வர நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா, தனக்கு ஓட்டு இல்லை என தெரிந்ததும், அது யாருடைய தப்பு என கேட்டுள்ளார்.
ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விளம்பரம் மட்டும் செய்கின்றது, இப்போது என் ஓட்டு இல்லை என்கிறார்கள், இது யாருடைய வேலை?

சிவகார்த்திக்கேயன் இன்று காலை 8 மணிக்கு வாக்களிக்க வளசரவாக்கத்தில் வாக்களிக்க சென்ற போது, அவரது மனைவி எண் இருந்ததாகவும், இவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனவும் தெரியவந்தது. அதனால் அவர், வாக்களிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அதே போல், காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும், சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்க சென்ற போது, அவரது வாக்கும் வாக்காளர் பட்டியலில் இல்லை எனவும், அவரும் வாக்களிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

“சர்கார்” படத்தின் போல், இந்த பிரச்சனையையும் பேசனுமா ?என் வீட்டில் இருக்கும் என் மனைவிக்கு ஓட்டு இருக்கு, ஆனால் எனக்கு இல்லையாம், என்று கேள்வி கேட்டுள்ளார்.

ரொம்ப நேரம் நின்ற பிறகு, ஓட்டு இல்லை என்று சொல்கிறார்கள், இது யாருடைய தவறு ? வாக்காளர் அடையாள அட்டையை வைத்து, வாக்களிக்கும் உரிமையை நீங்கள் எனக்கு தர வேண்டும். இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும், அப்புறம் ஏன் குடிமகன்கள் ஓட்டு போட வர வேண்டும் என கூறுகிறீர்கள் ? சினிமாக்காரர்கள் ஓட்டு போட வரமாட்டார்கள் என நினைத்து எனது ஓட்டை எடுத்து விட்டார்களோ எனக்கு சந்தேகமாக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  நடிகர் திலகம் சிவாஜிகணேசனை பேட்டி எடுத்த அந்தக்கால பிரபலங்கள்- அரிதான வீடியோ

மேலும், சிவகார்த்திக்கேயன் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோரின் ஓட்டுகளும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.