சிரிக்க மாட்டீங்களா? – பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்த ரோபோ சங்கர்

331

திரைப்படங்களில் காமெடி வந்தால் பத்திரிக்கையாளர் சிரிப்பதே இல்லை எனக்கூறிய ரோபோ சங்கரிடம் பத்திரிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ், நயன்தாரா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் ‘ நான் நன்றாக நடித்திருந்த காமெடி காட்சிகளை கூட அவர்கள் ரசிக்காமல் உர் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதை பார்க்க பிடிக்காமல் பத்திரிக்கையாளர் ஷோ என்றாலே நான் வரவே மாட்டேன்’ எனப் பேசினார். இதனால் கோபமடைந்த பத்திரிக்கையாளர் ஒருவர்  ‘காமெடி நன்றாக இருந்தால் சிரிக்க மாட்டோமா? சில காமெடிகளை மனதுக்குள் ரசிப்போம்’ என வாக்குவாதம் செய்தார். அதன்பின் ரோபோ சங்கர் ஒரு வழியாக சமாளித்தார்.

பாருங்க:  3 படங்கள் ; போயஸ்கார்டனில் ஒரு வீடு - ஜெயம் ரவி போட்ட கணக்கு!